உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ‛எல்காட் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5.5 லட்சம் மோசடி இருவர் மீது மோசடி வழக்கு

‛எல்காட் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5.5 லட்சம் மோசடி இருவர் மீது மோசடி வழக்கு

தேனி:'எல்காட்' நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மதுரையை சேர்ந்த ஜேசுராஜ் அன்புசெல்வன் 43, என்பவரிடம் ரூ.5.50 லட்சம் மோசடி செய்த தேனி மாவட்டம், வயல்பட்டி காலனி முத்துப்பாண்டி 42, அரண்மனைப்புதுார் கருப்பையா 36, மீது போலீசார் மோசடிவழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மதுரை அண்ணாநகர் ஜேசுராஜ் அன்புசெல்வன் அரசு வேலை தேடினார். இவரது மைத்துனர் மூலம் தேனி முத்துபாண்டி அறிமுகம் கிடைத்தது. முத்துப்பாண்டி, ரூ.6.50 லட்சம் கொடுத்தால் 'எல்காட்' தொழில்நுட்பக் கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை அல்லது சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக,' கூறினார்.இதனை நம்பி ஜேசுராஜ் அன்புசெல்வன் முன்பணமாக ரூ.1.50 லட்சத்தை, முத்துப்பாண்டியின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். அதன்பின் ரூ.5 லட்சம் நேரில் வழங்கினார். பணம் பெற்ற முத்துப்பாண்டி வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தார். ஜேசுராஜ் அன்புசெல்வன், பழனிச்செட்டிபட்டி போலீசில் புகார் அளித்து விசாரணை நடந்தது. பின் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மூலம் பணி ஆணை வந்துள்ளது என பணி ஆணை நகலை முத்துப்பாண்டி வழங்கினார். அது போலியானது என தெரிந்தது.அதன் பின் ஜேசுராஜ் அன்புசெல்வனிடம் அரண்மனைப்புதுார் காளியம்மன் கோயில் தெரு கருப்பையா, நான் முத்துபாண்டியின் நண்பர், ரூ.6.50 லட்சத்தை வாங்கித் தருகிறேன்.' எனக்கூறி ரூ.2 ஆயிரம் பெற்றார். அதன் பின் ரூ.1 லட்சம் மட்டும் திரும்ப கிடைத்தது. மீதியுள்ள ரூ.5.50 லட்சத்தை வழங்காமல் இருவரும் மோசடி செய்தனர்.பாதிக்கப்பட்டவர் தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் வழக்குப்பதிய உத்தரவிட்டதை தொடர்ந்து முத்துப்பாண்டி, கருப்பையா மீது பழனிச்செட்டிபட்டி போலீசார் மோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை