உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், திரவியம் கல்வி நிறுவனங்கள், வைகை ஸ்கேன் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடந்தது. திரவியம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் பாண்டியராஜ் தலைமை வகித்தார். செயலர் டாக்டர் ஹேமலதா முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் மஞ்சுளா முகாமினை துவக்கி வைத்தார். சர்க்கரை,ரத்த அழுத்தம், சிறுநீரகம், பொது மருத்துவம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. டாக்டர்கள் காமராஜ், ஜான் வெஸ்லின், தாரணி, ஜெய்லானி, பிரீத்தி, சந்திரா சிகிச்சை மேற்கொண்டனர். மீனவர் நல வாரிய உறுப்பினர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை