உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு ஐ.டி.ஐ.,களில் உதவி தொகையுடன் இலவச பயிற்சி

அரசு ஐ.டி.ஐ.,களில் உதவி தொகையுடன் இலவச பயிற்சி

தேனி: கட்டுமான கழகத்தில் பதிவு செய்த கட்டுமானத்தொழிலாளர்களுக்கு போடி அரசு ஐ.டி.ஐ.,களில் எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர், கார்ப்பென்டர், பெயிண்டர் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் 7 நாட்கள் வழங்கப்பட உள்ளது. பயிற்சி அக்., 22ல் துவங்குகிறது. பயிற்சியில் பங்கேற்பவர்களின் வங்கி கணக்கிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 வீதம் வழங்கப்படும். பயிற்சி நாட்களில் மதிய உணவு, தேனீர், வழங்கப்படும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நலவாரிய அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ரேஷன்கார்டு, ஆதார் ஆகியவற்றுடன் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். என தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ