உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

பெரியகுளம்; காந்தி ஜெயந்தி மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜ் நினைவு நாளை முன்னிட்டு பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் மகாத்மா காந்தி சிலைக்கு, காங்., நகர தலைவர் கனகசீதாமுரளி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகர எஸ்.சி., எஸ்.டி., அணி தலைவர் பிச்சை உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பெரியகுளம் வணிகவைசியகுல அபிவிருத்தி சங்கம் பொருளாளர் கணேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் ஐயப்பன் மாலை அணிவித்தார். மாவட்ட அமைப்பாளர் ஆதிலிங்க பாண்டியன், நகர செயலாளர் சரவணன், நிர்வாகிகள் மணிகண்டன், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். போடி: போடி நகர காந்திஜி - காமராஜர் நற்பணி மன்ற இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம் மன்ற தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. நிர்வாக இயக்குனர் காளிமுத்து, நிர்வாகிகள் ஜெகநாதன், பாண்டி, சுப்புராஜ், முனியாண்டி, பாலு, முத்தலிபு உட்பட பலர் பங்கேற்று காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். போடி நகர் காங்., சார்பில் காந்தி ஜெயந்தி , காமராஜர் நினைவு தினம் நகர தலைவர் முசாக் மந்திரி தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, நகர பொதுச் செயலாளர் அரசகுமார், நகர செயலாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர்கள் காந்தி, சின்னசாமி, இளைஞரணி மாநில செயலாளர் வினோத்குமார், நகர பொருளாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சின்னமனூர்: கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பள்ளி நிர்வாக குழு தலைவர் சிவமணி, செயலர் மாரிமுத்து, நிர்வாக குழு உறுப்பினர்கள் சங்கர நாராயணன், பாஸ்கரன், ஜெயச்சந்திரன், பாண்டியன், ஜோதிக்குமார், இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தலைமையாசிரியர் பாண்டித்துரை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். சின்னமனுார் நகர் பா, ஜ. சார்பில் நகர் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி நிரவாகிகள் மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை