ஆட்டோவில் கஞ்சா பதுக்கல்
தேனி: தேனி சிவாஜிநகர் 3வது தெருவில் ஒரு ஆட்டோவில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தேனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., இளங்குமரன் தலைமையில் போலீசார் சிவாஜிநகரில் ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். ஒரு ஆட்டோவில் 250 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. அந்த ஆட்டோவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.