உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பழுது துாய்மைப் பணியாளர்கள் அவதி

குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பழுது துாய்மைப் பணியாளர்கள் அவதி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பழுதானதால் பணியாளர்கள் குப்பையை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது.ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நெருக்கடியான தெருக்கள், குறுகிய சந்துகளில் சென்று குப்பை சேகரிக்க தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். வீடுகளில் அன்றாடம் சேரும் குப்பையை சேகரித்து வாகனங்களில் கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்கின்றனர்.பேரூராட்சியில் 30க்கும் மேற்பட்ட தள்ளு வண்டிகள், பேட்டரி வாகனங்கள், டிராக்டர்கள் உள்ளன. பல வாகனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. பழுதடைந்த வண்டிகளை பணியாளர்கள் தள்ளிச் செல்ல சிரமப்படுகின்றனர். பேட்டரி வாகனங்கள் பழுதால் இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டிராக்டர்களில் டிரைலர்கள் உடைந்துள்ளதால் குப்பை சிதறுகிறது. இதனால் வார்டுகளில் குப்பை சேகரித்து கிடங்கிற்கு கொண்டு செல்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. குப்பை சேகரிப்பு வாகனங்களை சரி செய்யவும் தூய்மை பணி தொழிலாளர்களுக்கு தேவையான கையுறை, முக கவசம், சீருடை வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை