உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: ஒருவர் கைது

 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: ஒருவர் கைது

தேனி: தேனி அருகே வீட்டில் 45 ஜெலட்டின் குச்சிகளை பதுக்கி வைத்திருந்த பூமலைக்குண்டு கோபால் 72, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடையதாக கருதப்படும் கோபால் மகன் விஜயரமேஷ்கிருஷ்ணன், வேப்பம்பட்டி பிரபு ஆகியோரை தேடி வருகின்றனர். பூமலைக்குண்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் விஜயரமேஷ்கிருஷ்ணன். இவர்களுக்கு அப்பகுதியில் நிலம் உள்ளது. அதில் வேப்பம்பட்டியைச் சேர்ந்த பிரபு மூலம் கிணறு தோண்டினர். இதற்காக உத்தமபாளையம் பகுதியில் உள்ள அனுமதி பெற்ற விற்பனையாளரிடம் பிரபு ஜெலட்டின் குச்சிகள் வாங்கினார். கிணறு பணி முடித்தும் மீதமிருந்த ஜெலட்டின் குச்சிகளை பிரபு எடுத்து செல்லவில்லை. அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து தருவதாகவும், அதுவரை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் நில உரிமையாளர்களிடம் தெரித்தார். இதனால் ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பு இன்றி வீடு அருகில் உள்ள தகர செட்டில் கோபால், விஜயரமேஷ்கிருஷ்ணன் வைத்திருந்தனர்.இத்தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 45 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து கோபாலை கைது செய்தனர். பின் அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்தனர். விஜயரமேஷ்கிருஷ்ணன், பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி