உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொதுத்தேர்வு: தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு

பொதுத்தேர்வு: தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு

தேனி; பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி தடையில்லாத மின் வினியோகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் கூறியதாவது: மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் துவங்கி உள்ளன. அடுத்தடுத்த நாட்களில் தேர்வுகளும் வர உள்ளன. இதனால் மாணவ, மாணவிகளின் படிப்பு நலன் கருதி மின்வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்க மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.அதனால் தேனி, சின்னமனுார், பெரியகுளம் சப்டிவிஷன் முழுவதும் உள்ள பகுதிகளில் தடையில்லா மின் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எதிர்பாராத விதமாக மழை, வெயில் உள்ளிட்டபாதிப்புகளால் தடை ஏற்பட்டால் அதனையும் போர்கால அடிப்படையில் சீரமைத்து உடனே மின்சாரம் வழங்கவும்அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !