உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கத்தியால் குத்தி தங்கச்செயின் பறிப்பு

கத்தியால் குத்தி தங்கச்செயின் பறிப்பு

மூணாறு: மூணாறு அருகே வட்டவடை, கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 42. இவர், சித்திராபுரம் டோபிபாலம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா 65, கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயினை ஜூன் 16 இரவில் பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த சகுந்தலா கூச்சலிட்டதால் ராஜ்குமார் கத்தியால் கழுத்தில் குத்தினார். அதனை தடுக்க வந்த சகுந்தலாவின் பேரன் அபிஷேக் 12, கையில் கத்தியால் குத்தி விட்டு செயினுடன் தப்பி ஓடினார்.இடுக்கி டி.எஸ்.பி. ராஜன் கே. அரமனா தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்து திருப்பூரில் பதுங்கிய ராஜ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை