உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பஸ் பழுது: பயணிகள் அவதி

அரசு பஸ் பழுது: பயணிகள் அவதி

தேனி; போடி டெப்போவிற்கு சொந்தமான அரசு பஸ் நேற்று மதியம் மதுரையில் இருந்து புறப்பட்டு போடிக்கு சென்றது. தேனி குன்னுார் டோல்கேட் வந்த போது பஸ்சின் ரேடியேட்டர் பழுதானது. இதனால் பஸ்சை டிரைவர் ரோட்டோரம் நிறுத்தினார். பஸ்சில் வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் வேறு பஸ்களில் மாற்றி தேனிக்கு அனுப்பபட்டனர். மாவட்டத்தில் பஸ் பராமரிப்பு இன்றி ஆங்காங்கே வழியில் நிற்பது அதிகரித்துள்ளது. அரசு பஸ்களை போதிய பராமரிப்பு செய்து இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ