மேலும் செய்திகள்
ரூ.1.15 கோடி கையாடல்: தம்பதிக்கு சிறை
09-May-2025
மூணாறு : ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரசு ஊழியருக்கு 21 ஆண்டு சிறை, ரூ.1.35 லட்சம் அபராதம் விதித்து தொடுபுழா போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கரிமண்ணூர் சாலாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் 48. இவர், 2020 டிசம்பரில் ஏழு வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடூர செயல் குறித்து சிறுமி பள்ளியில் ஆசிரியையிடம் கூறினார். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி கரிமண்ணூர் போலீசார் பிரதீப்பை கைது செய்தனர். இந்த வழக்கு தொடுபுழா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பால், பிரதீப்க்கு 21 ஆண்டுகள் சிறை, ரூ.1.35 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இடுக்கி மாவட்டம் இளம்தேசம் ஒன்றிய மேம்பாட்டு அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்த பிரதீப், தற்போது கோட்டயம் மாவட்டம் பாம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
09-May-2025