அரசு ஊழியர்கள் களஞ்சியம் செயலியில் விண்ணப்பிக்கலாம்
தேனி: 'மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் விடுமுறைக்கு விண்ணப்பிக்கவும், அதற்கு ஒப்புதல் பெற களஞ்சியம் செயலி மூலம் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.' என மாவட்ட உதவி கருவூலத்துறை அலுவலர் சுரேஷ் தெரிவித்தார்அவர்கள் கூறியதாவது: ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஊதிய நடைமுறை டிஜிட்டல் நடைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது.இதில் காகிதம் இல்லாத பயன்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அனைத்துத்துறை அரசு ஊழியர்களும் களஞ்சியம்செயலியில் தங்களது விடுமுறை விண்ணப்பங்களை பதிவு செய்து, ஆன்லைன் மூலமே ஒப்புதல் பெறும் வசதி பரவலாக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீத அரசுஊழியர்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர். மீதியுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இந்த டிஜிட்டல் நடைமுறைக்கு மாற வேண்டும் என்றார்.