உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தாவிற்கு வாழ்நாள் சிறை

பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தாவிற்கு வாழ்நாள் சிறை

தேனி:தேனி மாவட்டத்தில் 7 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த, பரோட்டா மாஸ்டரான 59 வயது தாத்தாவிற்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கூடலுாரை சேர்ந்த தம்பதியினர் அங்குள்ள வாழைத்தோப்பில் குடும்பத்துடன் வசித்து கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 7 வயது மகள் உள்ளனர். சிறுமி அப்பகுதி பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கூடலுாரில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்த தாத்தா தனது மகளுடன் வசித்தார். மகளுக்கு உடல்நலம் பாதித்ததால் 2024 பிப்.13ல் மகளை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். மதியம் வீட்டுக்கு திரும்பிய தாயாரிடம் சிறுமி வயிற்று வலி எனக்கூறினார். விசாரித்த போது தனது தாத்தா தன்னை பலமுறை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பெற்றோரிடம் கூறினால் இரவில் அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என்றார். அதிர்ச்சி அடைந்த தாய், உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். போலீசார் கொலை மிரட்டல், போக்சோ வழக்குப் பதிந்து முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 59 வயது தாத்தாவிற்கு வாழ்நாள் சிறை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.9.88 லட்சம் தமிழ்நாடு அரசு இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். அதில் ரூ.1.88 லட்சத்தை சிறுமியின் மருத்துவம், கல்வி செலவுக்காக சிறுமியின் தாயிடம் நேரில் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ