உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாட்டி கொலை: பேரன் கைது

பாட்டி கொலை: பேரன் கைது

உத்தமபாளையம்; உத்தமபாளையம் அருகே உள்ள கருக்கோடை காலனியில் வசிப்பவர் சுப்பம்மாள் 84, இதே காலனியில் வசிக்கும் இவரது பேரன் முத்து செல்வம் 24, மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று முன்தினம் இரவு தனது பாட்டி வீட்டிற்கு சென்று குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால், ஆத்திரத்தில் கல்லால் பாட்டியின் தலையில் அடித்துள்ளார். அதே இடத்தில் பாட்டி கீழே விழுந்து பலியானார்.கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து பேரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ