உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நெடுஞ்சாலையில் மேய்ச்சல் மாடுகளால் போக்குவரத்து இடையூறு

தேசிய நெடுஞ்சாலையில் மேய்ச்சல் மாடுகளால் போக்குவரத்து இடையூறு

கூடலுார்; கூடலுார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் மேய்ச்சல் மாடுகள் ஆக்கிரமித்து செல்கின்றன. கூடலுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மேய்ச்சல் மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மாடுகள் தினமும் காலையில் மேய்ச்சலுக்காக சென்று மாலையில் திரும்புகின்றன. கூட்டமாக செல்லும் மாடுகள் தேசிய நெடுஞ்சாலை முழுவதையும் ஆக்கிரமித்து நடந்து செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. நீண்ட தூரம் தேசிய நெடுஞ்சாலையிலேயே செல்வதால் வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் மெதுவாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. டூவீலர்களில் வருபவர்கள் ஒதுங்கி நிற்க இடமின்றி சிரமத்திற்கு உள்ளாகி விடுகின்றனர். சில நேரங்களில் டூ வீலரை தள்ளிவிட்டு மாடுகள் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாடுகளை ஓட்டிச் செல்பவர்கள் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் ஒரு பகுதியில் ஓட்டிச் செல்ல அறிவுறுத்த வேண்டும். நெடுஞ்சாலைத்துறை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை