உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளி ஆர்ப்பாட்டம்

பெரியகுளம்: பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி கருப்பையா 50. இவர் அரசு போக்குவரத்து டெப்போ முன் 'தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு ஆண்டாக உதவி தொகை வழங்கவில்லை, மாற்றுத்திறனாளி பட்டினி சாவு, என எழுதிய போர்டை கழுத்தில் அணிந்தும் மூன்று சக்கர வாகனம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தார். வடகரை எஸ்.ஐ., பிரேம்ஆனந்த் கருப்பையாவை தாசில்தார் அலுவலகம் அழைத்துச் சென்றார். அங்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்தியபாமாவிடம், கருப்பையா கோரிக்கை வைத்தார். சத்யபாமா கூறுகையில்: 40 முதல் 80 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு இங்கிருந்து மாதம் ரூ.1500 வழங்கப்படுகிறது. கருப்பையா 80 சதவீதத்திற்கும் அதிகம் என்பதால் அவருக்கு தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் வாயிலாக மாதம் ரூ.2000 மற்றும் மூன்று சக்கர வாகனம் இம்மாதமே வழங்க தயாராக உள்ளது. இது குறித்து கருப்பையாவிடம் தெரிவித்தேன், அவர் தேனி சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி