மானாவாரி மொச்சை சாகுபடி தொடர் சாரலால் மகிழ்ச்சி
கம்பம்: கம்பம் பகுதி மானாவாரி நிலங்களில் மொச்சை சாகுபடி அதிக பரப்பில் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. ரோட்டிற்கு மேற்கு பக்கம் உள்ள மானாவாரி நிலங்களில் எள்ளு, மொச்சை, துவரை, தட்டை, சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களும், பயறு வகைகளும் சாகுபடி செய்வார்கள்.கோடை மழையை எதிர்நோக்கி பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்வார்கள். கம்பம் வட்டாரத்தில் தற்போது எள்ளு, மொச்சை அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது . நடவு செய்த 45 நாளில் அறுவடை செய்யலாம். தொடர்ந்து சாரல் மழை கிடைத்து வருவதால், இந்தாண்டு மொச்சை சாகுபடியில் நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.