மேலும் செய்திகள்
பீட்ரூட் விலை உயர்வு: அறுவடை பணி தீவிரம்
23-Sep-2025
கம்பம்: கம்பம் பகுதியில் கன மழை பெய்து வருவதால் கடந்த வாரம் துவங்கிய நெல் அறுவடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பாசனத்தில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். லோயர்கேம்பில் ஆரம்பித்து கூடலூர், கம்பம், சின்னமனுார், கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வரை நீள்கிறது. தற்போது முதல் போகநெல் சாகுபடி நடந்துள்ளது. கடந்த வாரம் அறுவடை பணிகள் துவங்கியது. பெரும்பாலான விவசாயிகள் ஆர்.என்.ஆர். என்ற ரகத்தை சாகுபடி செய்துள்ளனர். சிலர் 509 என்ற வீரிய ஒட்டு ரகத்தை சாகுபடி செய்துள்ளனர். கடந்த வாரம் முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி, அறுவடை செய்ய முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது . இதனால் அறுவடையை விவசாயில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் விவசாயிக ளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் ஆர்.என். ஆர். ரகம் மழைக்கு தாங்காமல் கதிர்கள் சாய்ந்து விடுகிறது. சாய்ந்த கதிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கூடுதல் கூலி கேட்கப்படுகிறது. தற்போது விலையை பொறுத்த வரை 60 கிலோ மூடை ஆர்.என். ஆர். ரகத்திற்கு ரூ. 1360 ம், 509 ரகத்திற்கு ரூ. 1200ம் விலை கிடைத்து வருகிறது. தனியார் வியாபாரிகள் கொள்முதலில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
23-Sep-2025