உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊரக வளர்ச்சி அலுவலகம் அருகே   கருகி வீணாகும் மூலிகை செடிகள்

ஊரக வளர்ச்சி அலுவலகம் அருகே   கருகி வீணாகும் மூலிகை செடிகள்

தேனி: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அருகே பராமரிப்பின்றி மூலிகை, பழ, மரக்கன்றுகள் வீணாகி வருகிறது.ஒவ்வொரு ஊராட்சியிலும் மத்திய அரசின் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஒருங்கிணைந்த நாற்றங்கால் அமைக்கும் பண்ணை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் புதிய நாற்றுகள் உருவாக்கி பராமரிக்கின்றனர். அதனை ஊராட்சிக்குட்பட்ட ரோட்டோரங்களில் நடவு செய்து பராமரிக்கின்றனர்.வடபுதுப்பட்டி ஊராட்சி சார்பில்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கும், மாவட்ட தொழில் மையத்திற்கும் இடையே உள்ள பகுதியில் ரூ. 3.50 லட்சம் செலவில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டது. இங்கு வேலை உறுதி திட்டத்தில் பழ, மூலிகை கன்றுகள் வளர்த்து வந்தனர். ஒரு மாதத்திற்கும் செடி பராமரிப்பிற்கு பணியாளர்கள் வருவதில்லை. அதனால், ஊராட்சியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாமல், நன்கு வளர்ந்து இருந்த மூலிகை, பழ கன்றுகள் தண்ணீர் இன்றி கருகி வீணாகி விட்டன.சில கன்றுகள் மட்டும் பயன்படுத்தும் நிலையில் உள்ளன. அரசு திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ