உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தேனி : கலெக்டர் அலுவலகம் முன் ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமையில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக குப்பை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், 'தேனி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் சுகாதார சீர்கேடு காணப்படுகிறது. குப்பை அகற்றப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம், நோய் தொற்றுகளால் மக்கள் பாதிப்படைகின்றனர். நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=940pi8wv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கலெக்டர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரியிருந்தனர். நிர்வாகிகள் ராமமூர்த்தி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக வெற்றிலை, பாக்கு தட்டுடன் கலெக்டரை சந்திக்க ஊர்வலமாக செல்ல முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை