உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஹிந்து எழுச்சி முன்னணி  கண்டன ஆர்ப்பாட்டம்

ஹிந்து எழுச்சி முன்னணி  கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி : ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில், மாவட்டச் செலயாளர் ராமமூர்த்தி கலெக்டர் ஷஜீவனாவிடம்மனு அளித்தனர். அதில், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி, வெட்டி சமைப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதனை மீறி அசைவ உணவை மலைக்கு வாங்கிச் சென்று சாப்பிடுவது போல் புகைபடத்தை வலைதளத்தில் பதிவேற்றம் செய்து ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். தேசிய ஒருமைபாட்டிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது மத நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளது. தமிழகத்தில் மதகலவரத்தை துாண்ட நினைக்கும் எம்.பி., நவாஸ்கனியின் லோக்சபா உறுப்பினர் பதவியை குடியரசுத் தலைவர் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நவாஸ்கனி எம்.பி.,யை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை