ஊர்க்காவல் படையினர் பணியில் இணைப்பு
தேனி: மாவட்டத்தில் 34 ஊர்க்காவல்படையினர் பயிற்சி முடித்து, பணியில் இணையும் விழா நடந்தது.ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்து அடிப்படை பயிற்சி முடித்த 34 ஆண்கள், 4 பெண்கள் என 38 பேர் 2025 பிப் 3ல் அடிப்படை பயிற்சி பெற்றனர். அவர்களுக்கான பயிற்சி மார்ச் 27 நிறைவு பெற்றது. நேற்று பணியில் இணையும் நிகழ்ச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., சிவபிரசாத் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., சுகுமார், ஊர்க்காவல்படை திண்டுக்கல் சரக உதவி தளபதி அஜய்கார்த்திக்ராஜா, வட்டார தளபதி செந்தில்குமார், கோட்ட தளபதிமுத்துக்கிருஷ்ணன், ஆயுதப்படை டி.எஸ்.பி., ராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன்,ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், காளீஸ்வரன், ஊர்க்காவல்படையினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை எஸ்.ஐ., ஜாஹீர்உசேன், ஏட்டு பிரபாகரன் செய்திருந்தனர்.