உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனித நேய வார விழா

மனித நேய வார விழா

தேனி : தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில், ஆனைமலையான்பட்டி, தேவாங்கர் சமுதாயக் கூடத்தில் மனித நேய வார விழா நடந்தது. டி.எஸ்.பி., ஞானரவி தங்கத்துரை தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா, மாவட்ட சமூகநலத்துறை சட்ட ஆலோசகர் நிவேதா, சட்ட உதவிகள், அதன் நடைமுறைகள்' குறித்து விளககினர். ஏ.டி.எஸ்.பி., சுகுமார் பேசினார். ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சுருளி, ஆனைமலையான்பட்டி ஊராட்சித் தலைவர் மீனா, அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகி ரவி, ஏ.ஹெச்.எம்., அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் முகமது சேக் இப்ராகிம், கம்பம் புதுப்பட்டி எஸ்.சி.எஸ்.டி., அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் நிறுவனர் சுப்பிரமணியன், மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் ரமா பங்கேற்றனர். ஏற்பாடுகளை இப்பிரிவின் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ரகு, சுப்பையன், புள்ளியியல் ஆய்வாளர் ஆனந்தவடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ