உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் லூக்கா 35, இவருக்கு மனைவி, இரு மகள்கள், இரு மகன்கள் உள்ளனர். லோயர் கேம்ப் அருகே வெட்டுக்காடு பகுதியில் கூலி வேலை செய்து வந்த லூக்கா, ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்து இரு நாட்கள் தங்கி உள்ளார். மீண்டும் வேலைக்கு சென்று விட்டார். ஜூன் 11ல் அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வேலைக்கு சென்ற இடத்திலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி ரெபேக்காள் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை