தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்த யோசனை
தேவதானப்பட்டி : தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.பெரியகுளம் தாலுகாவில் 12 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தென்னையில் 'வெள்ளை ஈ' தாக்குதல் உள்ளது. இதன் தாக்கத்தால் தென்னை வளர்ச்சி குறைந்து, விளைச்சல் பாதிக்கும். தேவதானப்பட்டி விவசாயி மீராமைதீன் தோட்டத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா தலைமையில், உதவி இயக்குனர் ஜாஸ்மின், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஆதில் ரகுமான், தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்று விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், 'வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம். மஞ்சள் ஒட்டு பொறியில் கிரரீஸ், வேப்ப எண்ணெய் போன்ற ஒட்டும் தன்மையை பயன்படுத்த வேண்டும். ஸ்பிரேயர் மூலம் தண்ணீரை சோகைக்கு அடியில் வேகமாக அடிக்க வேண்டும். 'இன்கார்சியா கூடலோபியா' ஒட்டுண்ணியை பயன்படுத்த வேண்டும். ரசாயண பூச்சி கொல்லி அடிப்பதாலும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம் என்றனர்.-