மேலும் செய்திகள்
தொடர் மழையால் பசுமையாக மாறிய ம்
25-Oct-2026
தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு வரை உள்ள பைபாஸ் ரோட்டின் இருபுறமும் வனப்பகுதி அதிகம் உள்ளது. வனப்பகுதியில் குப்பை கழிவு, இறைச்சி கழிவுகளை தொடர்ந்து கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தேனி நகரில் உள்ள சில ஓட்டல்களும் கழிவுகளை இப்பகுதியில் வீசுகின்றனர். இதனை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி வனசரக அலுவலர் சிவராம் கூறுகையில், வனப்பகுதியில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. குப்பை கொட்டுவோர், அத்துமீறி உள்ளே நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வில் 9 பேர் வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை கண்டறிந்துள்ளோம். அதனை மீட்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். வனப்பகுதியை பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்க சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம்.
25-Oct-2026