செந்நாய் கூட்டம் அதிகரிப்பு
போடி: போடி அருகே குரங்கணி, முட்டம், பிச்சாங்கரை வனப்பகுதியில் செந்நாய் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மான், காட்டு பன்றி, காட்டு மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் செந்நாய் கூட்டம் அதிக எண்ணிக்கையில் உள்ளது. 5 முதல் 10 செந்நாய்கள் ஒரு கூட்டமாக ஒன்று கூடி வேட்டையாடும். போடி டாப்- ஸ்டேஷன் செல்லும் பகுதியில் சாம்பலாறு, முட்டம், முதுவாக்குடி, பிச்சாங்கரை உள்ளிட்ட வனப் பகுதியில் செந்நாய் கூட்டங்கள் அதிகமாக உலா வருகின்றன. இவை பெரும்பாலும் ஒன்று கூடி தனியாக செல்லும் மானை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளது. மலை அடிவாரங்களில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளை வேட்டையாடி உண்ணுகின்றன. மான்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டால் இரைகளை தேடி மலை அடிவார பகுதிகளுக்கு செந்நாய்கள் வருவது இல்லை என வனத்துறையினர் கூறுகின்றனர்.