உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழை, காற்றால் ஏலச்செடிகளில் அழுகல் நோய் அதிகரிப்பு

மழை, காற்றால் ஏலச்செடிகளில் அழுகல் நோய் அதிகரிப்பு

கம்பம், : இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை, வீசும் பலத்த காற்று காரணமாக நெடுங்கண்டம், வண்டன் மேடு பகுதியில் ஏலத்தோட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செடிகளில் அழுகல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.இடுக்கி மாவட்டத்தில் மாலி, சாஸ்தா நடை, வண்டன் மேடு, சங்குண்டான், புளியன் மலை, வாழ வீடு, மேப்பாறை, மாதவன் கானல், ஆமையாறு, அந்நியார் தொழு, நெடுங்கண்டம், பூப்பாறை, பாரத்தோடு, வெங்கலப்பாறை, நரியம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. ஏலக்காய் பறிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும்.இந்நிலையில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே துவங்கியதால் இடுக்கி மாவட்டத்தில் காற்றும் மழையும் அதிகமாக உள்ளது . 15 நாட்களுக்கு முன் பெய்த மழை, காற்றில் நெடுங்கண்டம், பாரத்தோடு, சுல்தானியா, கல்தொட்டி, வாழ வீடு, அய்யர் பாறை, மயிலாடும்பாறை, வண்டிப் பெரியாறு, மாலி பகுதியில் ஏலத்தோட்டங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்து ஏலச் செடிகள் சேதமடைந்தன.அதிலிருந்து மீண்டு வரும் முன், கடந்த 2 நாட்களாக பலத்த காற்றும், தொடர்ந்து சாரலும் பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏலச் செடிகளில் அழுகல் நோய் அதிகம் காணப்புகிறது. தட்டை, சரம், காய், கிழங்கு, வேர்

ஆலோசனை

இதனை கட்டுப்படுத்த இன்பினிட்டோ 400 மில்லி, சி ஒ சி 400 கிராம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது ரிடோ மில் கோல்ட் 400 கிராம் உடன் சி ஒசி 400 கிராம் கலந்து நன்றாக செடிகள் நனையும் படி தெளிக்கலாம் அல்லதுபுரோ பில்லர் 400 கிராம் தெளித்து அழுகலை கட்டுப்படுத்தலாம் என தொழில்நுட்ப ஆலோசகர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை