உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பெரியகுளம்: கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, குளித்து மகிழ்ந்து செல்வது அதிகரித்துள்ளது.பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. நேற்று வார விடுமுறை என்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்தனர். அருவி, நீரோடை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கும்பக்கரை அருவியில் தாவரவியல் பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ