மேலும் செய்திகள்
மழையின்றி குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம்
18-Sep-2024
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 570 கன அடியாக அதிகரித்துள்ளது.சில நாட்களாக இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின்றி நீர்வரத்து குறைந்து, நீர்மட்டமும் குறைந்து வந்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 17.4 மி.மீ., தேக்கடியில் 12.6 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 570 கன அடியாக அதிகரித்தது.தமிழகப்பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக 1511 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. நீர் இருப்பு 3888 மில்லியன் கன அடியாகும். அணையின் நீர்மட்டம் 126.25 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி).நேற்று முன்தினம் இரவு மழை பெய்த போதிலும் நேற்று காலையில் இருந்து மதியம் வரை கடும் வெப்பம் நிலவியது. மாலை மேகமூட்டமாக இருந்தது. மீண்டும் மழை தீவிரமடைந்தால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.
18-Sep-2024