மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தேனி: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி நியூஸ்ரீராம் நகர் தினமலர் நாளிதழ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஊழியர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தேசிய கொடி ஏற்றினார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில்வெள்ளை புறாக்களை கலெக்டர், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா பறக்க விட்டனர். அதன்பின் போலீசார் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், மொழிபோர் தியாகிகளின் வாரிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 16 தன்னார்வ நிறுவன உரிமையாளர்களுக்கு கேடயங்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. 47 பயனாளிகளுக்கு ரூ.67.60 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசுத்துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய 238 அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, கலெக்டர் பாராட்டினார். தேனி எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., சினேஹாபிரியா கொடி ஏற்றினார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜெரால்டு அலெக்ஸாண்டர், கலைக்கதிரவன்,டி.எஸ்.பி.,க்கள் நல்லு, பெரியசாமி, சிவசுப்பு, வெங்கடேசன், தேவராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ.,க்கள் திவான்மைதீன், மணிகண்டன்,அமெச்சுப் பணியாளர்கள்,போலீசார் பங்கேற்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் திட்ட இயக்குனர் அபிதாஹனீப் கொடி ஏற்றினார். உதவித் திட்ட அலுவலர் (வீடுகள்) விஜயசந்திரிகா, மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேயத்தேவன்,வட்டார வளர்ச்சி அலவலர்கள்பழனிவேல், சுவாமிநாதன், மக்கத்தம்மாள் பங்கேற்றனர். தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராமன் கொடி ஏற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மேல்நிலைப் பள்ளிகளின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் கொடி ஏற்றினார். மாவட்ட உதவிதிட்ட அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் ராமநாதன், உதவியாளர்கள் வேலுச்சாமி, ராமராஜூ, சந்திரக்குமார் உள்ளிட்டஅலுவலர்கள் பங்கேற்றனர். தேனி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) மைதிலி கொடி ஏற்றினார். கண்காணிப்பாளர்கள் கண்ணன், கிருஷ்ணவேனி, ஓவர்சீயர்ரங்கநாதன், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். தேனி என்.ஆர்.டி., நகர் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் கிராம குடிநீர் திட்ட கோட்ட அலுவலகத்தில் நடந்த விழாவில் நிர்வாகப் பொறியாளர் பார்த்தீபன்கொடி ஏற்றினார். உதவிப் பொறியாளர் அருண்குமார், இளநிலை வரைவு அலுவலர் அய்யாத்தேவன், உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துறை அலுவலர்கள், பொது மக்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டன. மாவட்ட வன அலுவலகத்தில் நடந்த விழாவில் மாவட்ட வன அலுவலர் சமர்த்தா கொடி ஏற்றினார். அலுவலக கண்காணிப்பாளர் விவேகானந்தன், தேனி வனச்சரகர் சிவராம், வனவர்கள் அய்யனார்செல்வம், ராஜசேகரன், வனக்காப்பாளர்கள் பங்கேற்றனர். தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி கொடி ஏற்றினார். கல்லுாரிச் செயலாளர் மாறன்மணி வரவேற்றார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பழனிக்குமார், சவுந்திரபாண்டியன், ராஜா பங்கேற்றனர். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் எட்டு இயக்கங்களாக அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்விப்பிரிவு முதன்மையாளர் கோமதி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சரண்யா, துணை முதல்வர் கிருஷ்ணவேணி, விடுதி காப்பாளர் உமா ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் உமாகாந்தி நன்றி தெரிவித்தார். தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் கொடி ஏற்றினார். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரிச் செயலாளர் சோமசுந்தரம், இணைச் செயலாளர் சுப்ரமணி, உறவின்முறை தலைவர் தர்மராஜன், துணைத் தலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை துணை முதல்வர் சத்யா, வேலை வாய்ப்புத்துறை அலுவலர் கார்த்திகேயன், உடற்கல்வி இயக்குநர்கள் சுந்தரராசன்,நேதாஜி, மாலினி செய்திருந்தனர். துணை முதல்வர் மாதவன் நன்றி தெரிவித்தார். தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளியில் பள்ளிச் செயலாளர் வாசு கொடி ஏற்றினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் பள்ளிச் செயலாளர் சண்முகநாதன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் சரவணன்,அலுவலர்கள் பங்கேற்றனர். தேனி நகராட்சி எதிரில் உள்ள லைப் இன்னோவேஷன் நர்சரி - பிரைமரி பள்ளி விழாவில் பள்ளி தாளாளர் நாராயண பிரபு கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை முதல்வர் அனிதா செய்திருந்தனர். வடபுதுப்பட்டி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் நடந்த விழாவில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி பரமேஸ்வரி கொடி ஏற்றினார். பள்ளிச் செயலாளர் நாராயணபிரபு, செயலாளர் அஜய்துர்கேஷ் பங்கேற்றனர். முதல்வர் ஷ்யாமளாகவுரி, ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர். வெங்கடாசலபுரம் வரத வேங்கடரமண மேல்நிலைப் பள்ளியில் சபை செயற்குழு உறுப்பினர் கண்ணதாசன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் தினகரன் வரவேற்றார். சபை தலைவர் ஜி.சீனிவாசன் தலைமை வகித்தார். பொருளாளர் ஏ.சீனிவாசன் முன்னிலை வகித்தார். 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நன்கொடையாளர்கள் ரொக்கப்பரிசுகள் வழங்கி பாராட்டினர். ஆசிரியர் லெனின் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் என்.சீனிவாசன் நன்றி தெரிவித்தார். கம்பம்: ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா பி.டி.ஓ.,துர்கா தேவி கொடியை ஏற்றினார். கம்பம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் வனிதா கொடி ஏற்றினார். கமிஷனர் உமாசங்கர்,அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கம்பம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, வடக்கு ஸ்டேஷனில் எஸ்.ஐ நாகராஜன் கொடி ஏற்றினர். நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் காந்த வாசன் கொடி ஏற்றினார். இணை செயலாளர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. - ஆர்.ஆர். இன்டர்நேசனல் பள்ளி நிர்வாக குழு தலைவர் ராஜாங்கம் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் அசோக்குமார், செயல் தலைவர் ஜெகதீஷ் பங்கேற்றனர். எஸ்.பி.எம். ஜெய்டெக் இன்டர்நேசனல் பள்ளியில் சேர்மன் ஜெகதீஷ் கொடியை ஏற்றினார். தாளாளர் கீதா , முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் அச்சுத நாகசுந்தர் கொடியை ஏற்றினார். முதல்வர் கருப்பசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் மகுட காந்தன் கொடி ஏற்றினார். ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செளந்தரராசன் கொடி ஏற்றினார். தாளாளர் கவிதா, முதுநிலை முதல்வர் சுவாதி பங்கேற்றனர். சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை பள்ளி தாளாளர் திருமலை சுதாகரன் ஏற்றினார். தலைமையாசிரியர் சையது அப்தாகிர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். உத்தமபாளையம் : உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் எச்.முகமது மீரான் வரவேற்றார். ஒய்வு பெற்ற பேராசிரியர் ஹசன்பானு கொடியை ஏற்றினார். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி ஏற்பாடுகளை செய்தார். விசாகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி குழும தலைவர் இந்திரா தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினார். தாளாளர் உதயகுமார், முதல்வர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். எஸ். ஏ.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்பள்ளி செயலர் கண்ணன் கொடிஏற்றினார். தாளாளர் ஆறுமுகம், முதல்வர், மாணவர்கள் பங்கேற்றனர். ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் ஆர்.டி.ஒ. செய்யது முகமது கொடியை ஏற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் காசிம் கொடி ஏற்றினார். கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் அய்யம்மாள் கொடி ஏற்றினார். அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். உத்தமபாளையம் பா.ஜ. சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் நகர் தலைவர் நாகவேல் கொடி ஏற்றினார். மாவட்ட நிர்வாகி தங்கபொன்ராசா, நிர்வாகிகள் பங்கேற்றனர். சாஸ்தாநடை ஆரம்ப பள்ளியில் கொடியை தலைமையாசிரியர் பாண்டுரங்கன் ஏற்றினார். வார்டு உறுப்பினர் கருப்பசாமி, ஆசிரியர் சாரம்மா, ஆர்த்தி, மணிகண்டன் பங்கேற்றனர். க. புதுப்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளியில் தேசிய கொடியை தலைமையாசிரியர் சரவணன் ஏற்றினார். ஆசிரியை நிறைமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூடலூர்: நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பத்மாவதி கொடி ஏற்றினார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவுன்சிலர் லோகந்துரை, நகராட்சி பொறியாளர் சந்தியா, மேலாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி கொடி ஏற்றினார். தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ராஜாங்கம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமையில் ஓய்வுபெற்ற ஆசிரியை வைசாலி கொடி ஏற்றினார். திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அதிபர் தலைமையில், தாளாளர் மூர்த்திராஜன் கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சி நடந்தது. வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., கருப்பையா, லோயர்கேம்ப் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., மாயாண்டி கொடி ஏற்றினர். ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. என்.எஸ்.கே.பி. காமாட்சியம்மாள் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை சத்தியபாமா முன்னிலையில், தாளாளர் பொன்குமரன் கொடி ஏற்றினார். வ.உ.சி. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அருண் பிரசன்னா கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பா.ஜ., சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் சந்தனகுமார் கொடியேற்றினார். ஹிந்து முன்னணி சார்பில் நகர தலைவர் ஜெகன் கொடியேற்றினார். முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் முன்னாள் தலைவர்கள் தங்கராஜ், சோலைராஜ், அண்ணாத்துரை, ஜெயராஜ், முருகேசன், தமிழரசன், அழகேசன், கொடியரசு, செயலாளர் அன்பு, பொருளாளர் ராமர் முன்னிலையில் தலைவர் ஜெயராஜ் கொடியேற்றினார். மழலையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் சகிலாசுலைமான் முன்னிலையில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செந்தில் குமரன் கொடி ஏற்றினார். ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளியில் முதல்வர் பாலகார்த்திகா கொடி ஏற்றினார். இந்து ஆரம்பப் பள்ளியில் தாளாளர் முத்துக்குமரன் முன்னிலையில், தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கொடி ஏற்றினார். முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் கொடி ஏற்றினார். எஸ்.டி.பி.ஐ., கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் ரபீக், தலைவர் நாகூர்மீரான், சட்டமன்ற தொகுதி தலைவர் அஜ்மீர்கான், செயலாளர் சபீர்கான் முன்னிலையில் சமூக ஆர்வலர் லோகநாயகி கொடியேற்றினார். லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் கொடி ஏற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியங்கா உட்பட பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். லோயர்கேம்ப் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில், ஆசிரியை ஞானசரஸ்வதி கொடி ஏற்றினார். கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் செயலாளர் ராமகிருஷ்ணன், இணைச் செயலாளர் வசந்தன், முதல்வர் ரேணுகா முன்னிலையில், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி கொடி ஏற்றினார். கலைநிகழ்ச்சி நடந்தது. ஆண்டிபட்டி: - ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,சரவணன் கொடியேற்றினார். பி.டி.ஓ., (கி.ஊ.) ஐயப்பன், துணை பி.டி.ஓ., மீனாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., சிவசுப்பு கொடியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் கொடியேற்றினார். அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் காயத்ரி கொடியேற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சந்திரகலா கொடியேற்றினார். அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். பிச்சம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார், கோத்தலூத்து ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மார்கண்டன், திருமலாபுரம் ஊராட்சியில் செயலாளர் குமரேசன், டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் கொடியேற்றினர். ஊராட்சி செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சித்தார்பட்டி கணேசா நடுநிலைப் பள்ளியில் பள்ளி செயலாளர் ஜெயக்கொடி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் கொடியேற்றினார். செயலாளர் மாத்யூ ஜோயல், முதல்வர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் வச்சிரவேல் முன்னிலையில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கொடியேற்றினார். எஸ்.கே.ஏ.,மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் சாந்தி, எஸ்.கே.ஏ., கல்வியியல் கல்லூரியில் முதல்வர் தங்கவேல் கொடியேற்றினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பரிசுகள் வழங்கப்பட்டன. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் முத்து சித்ரா கொடியேற்றினார். துணை முதல்வர் தேன்மொழி, உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் ஈஸ்வரன், மணிமொழி, அனைத்து துறை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டி காமராஜர் சிலை அருகில் காங்., கட்சி சார்பில் முன்னாள் நகர் தலைவர் சிவாஜி கொடியேற்றினார். வட்டார தலைவர் ரவி, நகர தலைவர் சுப்புராஜ், நகர செயலாளர் ராஜாங்கம், துணை தலைவர் வேல்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில் வளாகத்தில் கோயில் நிறுவனர் முத்து வன்னியன் கொடியேற்றினார். கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். போடி: போடி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கொடி ஏற்றினார். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நகர செயலாளர் பழனிராஜ், முன்னாள் நகர செயலாளர் ஜெயராமன், நகர அவைத் தலைவர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் அரண்மனை சுப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். போடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கோபிநாத், குரங்கணி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் கொடி ஏற்றினார். நகராட்சி அலுவலகத்தில் தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்து கொடி ஏற்றினார். கமிஷனர் பார்கவி, பொறியாளர் குணசேகர், சுகாதார அலுவலர் மணிகண்டன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் கல்லூரி செயலாளர் புருஷேத்தமன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். கல்லூரி முதல்வர் சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், சொரூபன், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் இனாயத் உசேன்கான் கொடி ஏற்றினார். தலைவர் செந்தில் தியாகராஜன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். ஆட்சிக் குழு உறுப்பினர்கள் சேதுராம், மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் செந்தில் குமார் தலைமை வகித்து கொடி ஏற்றினார். ஆசிரியர் செல்வம் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உப்புக்கோட்டை பச்சையப்பா உயர் நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளர் லட்சுமி வாசன் தலைமை வகித்து கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் புவனேஸ்வரி, நிர்வாக குழு உறுப்பினர் பச்சையப்பராஜா முன்னிலை வகித்தனர். டாக்டர் நாகநந்தினி, வித்யா பாரதி தென் தமிழ்நாடு மாநில செயலாளர் நல்லசிவன், பிரம்ம குமாரிகள் சற்குணம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. போடி அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வர் வசந்த நாயகி கொடி ஏற்றினார். என்.எஸ் எஸ்.. திட்ட அலுவலர் தமிழ்மாறன், உதவி பேராசிரியர் ஜூடி ஜெனிட்டா முன்னிலை வகித்தனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அன்னை இந்திரா நினைவு ஆரம்பப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி தலைமை வகித்து கொடி ஏற்றினார். பள்ளி செயலாளர் சிவனேஸ்வர மணிச்செல்வன், ஆசிரியர் முத்து கார்த்திகா முன்னிலை வகித்தனர். நேரு குழந்தைகள் நல கண்காணிப்பாளர் சரவண பாண்டியன் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பரிசுகள் வழங்கப் பட்டன. காமராஜ் வித்யாலயா துவக்கப் பள்ளியில் பள்ளி செயலாளர் உஷா எல்லம்மாள் கொடி ஏற்றினார். சேவா அறக்கட்டளை செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட உரத்த சிந்தனை செயலாளர் முத்து விஜயன், பொதுச்செயலாளர் உதயராம், தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. பெரியகுளம்: பெரியகுளத்தில் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் அலுவலகத்தில் முன்னாள் விமானப்படை அதிகாரி கணேசன் கொடியேற்றினார். செயலாளர் ராஜாராம், பொருளாளர் பொன்னுசாமி, முன்னாள் ராணுவவீரர்கள் ரத்தினம், பாண்டியராஜன், காமராஜ் பாண்டியன் பங்கேற்றனர். துணை பொருளாளர் முத்துலட்சுமி நன்றி கூறினார். பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ரஜத்பீடன் கொடியேற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மருதுபாண்டி, மாவட்ட அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் குமார் கொடியேற்றினார். செவிலியர் கண்காணிப்பாளர்கள் ராணி, கணேஷ்குமார், குமுதா மற்றும் மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடியேற்றினார். சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜாமணி, செல்வக்குமார், வெங்கடாசலம், ஏட்டு தங்கம்,போலீசார் சூரியா பிரகாஷ் பங்கேற்றனர். பெரியகுளம் நகராட்சியில் தலைவர் சுமிதா கொடியேற்றினார். கமிஷனர் தமிஹா சுல்தானா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் அசன் முகமது, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., புவனேஸ்வரி கொடி ஏற்றினார். வடுகபட்டி கவியரசு கண்ணதாசன் நூலகத்தில் நூலக வளர்ச்சிக்குழு தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். மூத்த வாசகர் சண்முகநாதன் கொடியேற்றினார். பேரூராட்சி தலைவர் நடேசன், துணைத்தலைவர் அழகர் பங்கேற்றனர். நூலகர் திருமூர்த்தி நன்றி கூறினார். லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் லதா தலைமை வகித்தார். செயலாளர் விஜயராணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கொடியேற்றினார். பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராம்சங்கர் கொடியேற்றினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரியகுளம் சேக்கிழார் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயகுமார் கொடியேற்றினார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார். பெரியகுளம் விக்டரி மெட்ரிக் பள்ளியில் தலைவர் கோபாலகிருஷ்ணன் கொடியேற்றினார். செயலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுகுமாரன் வரவேற்றார். கலை நிகழ்ச்சி நடந்தது. டேவிட் ஆரம்பப் பள்ளியில், ராயல் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தலைவர் ஸ்ரீதர் கொடியேற்றினார். செயலர் வெங்கடேஷ், பொருளாளர் முருகன், மாவட்ட தலைவர் நவ்ஷாத், பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், மூத்த ஆசிரியை தமிழ்ச்செல்வி பங்கேற்றனர். பள்ளி செயலர் ராஜ்குமார் நன்றி கூறினார். தென்கரை பேரூராட்சியில் தலைவர் நாகராஜ் கொடியேற்றினார். செயல்அலுவலர் குணாளன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் , தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி கொடியேற்றினர். கீழவடகரை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் லெனின்,சருத்துப்பட்டி ஊராட்சியில் செயலாளர் செல்லப்பாண்டி கொடியேற்றினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வினோபன் பங்கேற்றனர். எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் செயலாளர் பாண்டியராஜ் கொடியேற்றினார். அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். மேல்மங்கலம் ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் கொடியேற்றினார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். வடபுதுப்பட்டி ஊராட்சியில் செயலாளர் மணிகண்டன் கொடியேற்றினார். ஜெயமங்கலம் ஊராட்சியில் செயலாளர் கோபால் கொடியேற்றினார். பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் செயலாளர் ஜெயபாண்டியன் கொடியேற்றினார். குள்ளப்புரம் ஊராட்சியில் செயலாளர் முத்துசெல்வம் கொடியேற்றினார். லட்சுமிபுரம் ஊராட்சியில் முன்னாள் ராணுவ வீரர் பெருமாள்சாமி கொடியேற்றினார். ஊராட்சி செயலாளர் நந்தினி முன்னிலை வகித்தார். மூணாறு: : இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட சுதந்திர தின விழா இடுக்கி ஐ.டி.ஏ. மைதானத்தில் நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பை ஏற்றார். இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ், மாவட்ட ஊராட்சி தலைவர் ராரிச்சன், கலெக்டர் தினேஷ் செருவாட், எஸ்.பி.சாபுமாத்யூ உட்பட பலர் பங்கேற்றனர்.