உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் தகவல்

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா அபார வளர்ச்சி பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் தகவல்

தேனி: பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா பல்வேறு துறைகளில் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது என பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் கூறினார்.பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து பா.ஜ., சார்பில் ஜூன் 25 வரை தெருமுனை பிரச்சாரம், கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது. இது குறித்த ஆலோசனைக்கூட்டம் தேனி பா.ஜ., அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் முன்னிலை வகித்து கூறியதாவது: மோடி பிரதமராக பதவியேற்ற பின் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 4வது நாடாக உயர்ந்துள்ளது, 2047ல் முதலிடம் பிடிக்கும். காங்., 10 ஆண்டுகால ஆட்சி ஊழல் நிறைந்து இருண்டகாலமாக இருந்தது. ஒரு குடும்பத்தின் பிடியில் ஆட்சி இருந்தது. தற்போது பாதுகாப்புத்துறையில் சுயசார்பு, தன்னிறைவு அடைந்துள்ளோம்.தளவாடங்கள் ஏற்றுமதி செய்கிறோம். டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகின் முன்னணி நாடாக மாறி உள்ளோம். தேசம் முழுவதும் சீரான வளர்ச்சியை உறுதிபடுத்தி செய்யப்பட்டுள்ளது.80 சதவீத நக்சல்கள் ஒழிக்கப்பட்டு விட்டனர். விண்வெளி ஆய்வுகளில் அபார வளர்ச்சி அடைந்துள்ளோம். விவசாயிகள், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கிறோம். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் வழங்கி உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி