உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மத்திய குழு அதிகாரிகள்... ஆய்வு : மத்திய அரசு திட்டங்களில் செலவிடும் நிதி கண்காணிப்பு

மத்திய குழு அதிகாரிகள்... ஆய்வு : மத்திய அரசு திட்டங்களில் செலவிடும் நிதி கண்காணிப்பு

மத்திய அரசின் முதியோர் உதவித் தொகை பெறுபவர்கள், அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள், வேளாண் துறையில் வழங்கும் மானியங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பணிகள். 15 வது நிதிக்குழு மானியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் வேலை நடைபெற்றுள்ள இடங்களில் அதற்குரிய விபரங்கள் அடங்கிய பலகை வைக்கப்பட்டுள்ளதா, ஊராட்சிகளில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா போன்றவை குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகள் முத்துக் குமார் , பழனிவேல் ஆகியோர் வந்துள்ளனர்.மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி ஆகிய மூன்று ஒன்றியங்களில் மட்டும் தலா 2 ஊராட்சிகள் வீதம் 6 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். முதற்கட்டமாக நேற்று முன்தினம் உத்தமபாளையம் ஒன்றியத்தில் ராயப்பன்பட்டி, டி. சிந்தலச்சேரி ஊராட்சிகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, ஒன்றிய பி.டி.ஓ.க்கள் ஜெகதீசன், ஜெயப்பிரகாஷ், ஊராட்சி செயலாளர்கள் சுந்தர பாண்டியன், சிவசங்கர் இருந்தனர். இரண்டு ஊராட்சிகளிலும் ரோடுகள், அங்கன்வாடி மையங்கள் பார்வையிட்டனர். முதியோர் உதவி தொகை மற்றும் வேளாண் துறை மானியம் பெற்ற பயனாளிகள் தலா நால்வரிடம் விசாரித்தனர். பின்னர் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள், போடி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் கள ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.இது குறித்து பி.டி.ஒ. க்கள் கூறுகையில் , ' ஆண்டிற்கு ஒரு முறை மத்திய குழு ஆய்வு நடத்துவது வழக்கமான நடவடிக்கையாகும். ஆறு ஊராட்சிகளிலும் ஆய்வு முடிந்த பின், கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்துவார்கள். அதில் அவர்களது கருத்துக்களை கூறுவார்கள். பரிந்துரைகளையும் தெரிவிப்பார்கள்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ