உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேளாண் விரிவாக்க மையங்களில் பிற மாவட்ட அதிகாரிகள் ஆய்வு

வேளாண் விரிவாக்க மையங்களில் பிற மாவட்ட அதிகாரிகள் ஆய்வு

தேனி: மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் திண்டுக்கல் மாவட்ட வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் தலா ஒரு வேளாண் விரிவாக்க மையம், 13 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன. இம்மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான நெல், கம்பு உள்ளிட்ட தானிய விதைகள், எண்ணெய் வித்துக்கள், பயறு வகை பயிறு விதைகள், வேளாண் கருவிகள், மருந்துகள், உரங்கள் விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.பருவமழையை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ள விதைகள், மருந்துகள் உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுகள் நடந்து வருகிறது.மாவட்டத்தில் உள்ள விரிவாக்க மையங்களில் திண்டுக்கல் வேளாண் துணை இயக்குனர் அமலா தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.ஆய்வில் விதைகள், உரங்கள், மருந்துகள் மட்டுமின்றி பணமில்லா பரிவர்த்தனை மூலம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள், விற்பனை செய்த பொருட்களுக்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ