நெற் பயிருக்கு ஜூலை 31க்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
தேனி; நெற் பயிருக்கு ஜூலை 31க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேளாண் துறையினர் விவசாயிகளை அறிவுறுத்தி உள்ளனர். வேளாண் துறையினர் கூறியதாவது: இயற்கை பேரிடர்கள், எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்களில் பயிர் சேதமடைந்தால் உரிய இழப்பீடு வழங்க பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் குறுவை சாகுபடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். நெல், எள் சாகுபடி செய்துள்ள காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அடங்கல், ஆதார் நகல், பட்டா, சிட்டா உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பிரிமியம் தொகையாக நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.761 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இழப்பு ஏற்பட்டால் ரூ. 36 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம், என்றனர்.