உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் கூட்டுறவு சங்கத்தில் பங்கு தொகை வழங்குவதில் சிக்கல்

போலீஸ் கூட்டுறவு சங்கத்தில் பங்கு தொகை வழங்குவதில் சிக்கல்

இக்கூட்டுறவு கடன் சங்கம் தேனி என்.ஆர்.டி., நகரில் இயங்கி வருகிறது. 670 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இச் சங்கத்தில் செயலாளர் மட்டுமே பணியாற்றி வருகிறார். எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பட்டுவாடா பணி முடங்கின. இது ஒருபுறம் இருக்க உறுப்பினர்களின் கடன் செலுத்தும் தகுதியின் அடிப்படையில் ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இச் சங்கத்தில் பலகோடி ரூபாய் வரவு செலவு நடக்கிறது. இவர்கள் மாதந்தோறும் செலுத்தும் கடன் தவணை தொகை, மாதந்தோறும் (ஆர்.டி.,) தொடர் வைப்பு நிதி செலுத்துதப்படுகிறது. பொங்கல், தீபாவளி பண்டிகையை யொட்டி சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் டிவிடெண்ட் வழங்கப்படாமல் உள்ளது.கடந்த 8 மாதங்களாக இத் தொகை கிடைக்காமல் போலீசார் புலம்புகின்றனர்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதால், போலீசாருக்கு பங்குத்தொகை வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து லோக்சபா தேர்தல் முடிந்த பின் பங்குத்தொகை பயனாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் மகிழ்ச்சி அடைந்தாலும், இக்கடன் சங்கத்தில் செயலாளர் மட்டுமே பணியில் உள்ளதால் பயனாளிகளின் பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் விரைவில் எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ