உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடவிற்கு முன் விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் வேளாண்துறை அறிவுறுத்தல்

நடவிற்கு முன் விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் வேளாண்துறை அறிவுறுத்தல்

தேனி, : நடவு செய்வதற்கு முன் விதைகள் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என மாவட்ட வேளாண் விதைப்பரிசோதனை அலுவலர் சிவகாமி, வேளாண் அலுவலர்கள் சதீஷ், மகிஷாதேவி அறிவுறுத்தி உள்ளனர். அவர்கள் கூறியதாவது: மாவட்டதில் பல இடங்களில் விவசாயிகள் நடவு பணிகளை துவங்கி உள்ளனர். ஒவ்வொரு பயிர் நடவின் போதும் விதையில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக நெல்லில் 13 சதவீதம், கம்பு, கேழ்வரகில் 12, பருத்தியில் 10, எண்ணெய் வித்துக்களில் 9 சதவீத ஈரப்பதம் இருக்க வேண்டும். விதைகளில் ஈரப்பதம் கூடுதலாக இருந்தால், அவை எளிதில் பூச்சி, பூஞ்சணத் தாக்குதலுக்கு உள்ளாகும். இது பயிர் விளைச்சல், மகசூலை பாதிக்கும். இதனை தவிர்க்க விதை நடவிற்கு முன் விதை மாதிரிகளை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். விதை மாதிரிகளை சுக்குவாடன்பட்டியில் வேளாண் விற்பனை குழு அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விதைப் பரிசோதனை மையத்தில் வழங்கி பரிசோதனை செய்யலாம். இதற்கு கட்டணமாக ரூ. 80 செலுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை