உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜாக்டோ ஜியோ பிரசாரம்

ஜாக்டோ ஜியோ பிரசாரம்

தேனி: 'ஜாக்டோ ஜியோ' சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவ., 18 ல் அடையாள தற்செயல் விடுப்பெடுத்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக பிரசாரத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜ்தீன் தலைமையில் நேற்று துவங்கினர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவு அலுவலகங்கள், பிற இடங்களில் உள்ள அலுவலகங்களில் பிரச்சார நோட்டீஸ்களை அலுவலர்களிடம் வழங்கினர். மேலும் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஆதரவு கோரினர். நிர்வாகிகள் ரவிக்குமார், மோகன், அன்பழகன், சுல்தான் உள்ளிட்டோர் பிரசாரத்தில் பங்கேற்றனர். அமைப்பு சார்பில் நவ., 14 வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிரசாரம் செய்ய உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி