உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜல் ஜீவன் பணிகள் முடக்கம்

ஜல் ஜீவன் பணிகள் முடக்கம்

கம்பம்: க.புதுப்பட்டி பேரூராட்சியில் ஜல்ஜீவன் திட்டப்பணி துவங்கி சில ஆண்டுகளை கடந்தும், முடிவிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. க. புதுப்பட்டி பேரூராட்சியில் 14 வார்டுகள் உள்ளன. உட்கடை பகுதிகளாக இந்திரா நகர் காலனி, ஊத்துக்காடு மற்றும் கோசேந்திர ஓடை பகுதிகள் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 கோடியில் ஜல் ஜீவன் திட்டம் வழங்கப்பட்டது. இத் திட்டத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைப்பது, பகிர்மான குழாய் பதிப்பது, ஆற்றில் உறை கிணறு அமைத்து பம்பிங் செய்து சப்ளை செய்வது, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டும். பணிகள் துவங்கி சில ஆண்டுகளை கடந்தும், பணிகள் முடங்கியுள்ளன. புதிய திட்டத்தில் குடிநீர் சப்ளை துவங்கவில்லை. லோயர்கேம்ப்பிலிருந்து சப்ளையாகும் தண்ணீரை வைத்து சப்ளை செய்கின்றனர். அது பற்றாக்குறையாக உள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் பணியினை கண்டுகொள்ளாமல் உள்ளார். பணிகளை துரிதப்படுத்தி தட்டுப் பட்டபின்றி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை