மேலும் செய்திகள்
ஓவர் லோடு ஏற்றிய 5 டிப்பர் லாரிகள் பறிமுதல்
08-Sep-2024
தேனி,: ஜல்லி, எம்.சான்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், பொறியாளர்கள், கட்டுனர்கள் ஆதரவளிக்க வேண்டும் என மாவட்ட வைகை கல்குவாரி, ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஜல்லி, எம்.சான்ட், கிரஷர்களின் சக்கை கல் விலை, மெஷனரி உதிரி பாகங்களின் விலை உயர்வு, மின் கட்டணம் 20 சதவீதம் உயர்வு, வேலையாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கிரஷர் தொழில்நலிவடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு ஆண்டிற்கு முன் விலை உயர்த்தப்பட்டாலும், பொதுமக்கள் நலன் கருதி விலை உயர்த்தாமல் இருந்தோம். தவிர்க்க முடியாத காரணத்தினால், தற்போது ஜல்லி, எம்.சான்ட், பி.சான்ட் யூனிட்க்கு ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. இனி யூனிட் ஜல்லி ரூ.3 ஆயிரம், எம்.சான்ட் ரூ. 4ஆயிரம், பி.சான்ட் ரூ.5ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
08-Sep-2024