மேலும் செய்திகள்
ஆண்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு
23-Apr-2025
ஆண்டிபட்டி: தேவை அதிகரிப்பால் ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகை பூக்கள் விலை கிலோ ரூபாய் ஆயிரத்தை கடந்து விற்பனையானது.ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகை பூக்கள் சாகுபடி உள்ளது. இப்பகுதியில் விளையும் மல்லிகை பூக்கள் உள்ளூர் தேவையுடன் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. கோடை காலம் மல்லிகை விளைச்சலுக்கு ஏற்றதாக இருப்பதால் கடந்த சில வாரங்களாக விளைச்சல் அதிகரித்துள்ளது. வீரபாண்டி, மதுரை சித்திரை திருவிழாக்களிலும் பூக்களின் தேவை அதிகம் இருப்பதால் கடந்த சில நாட்களில் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு தற்போது தினமும் 5 டன் அளவில் மல்லிகை பூக்கள் வரத்து உள்ளது. தற்போது உள்ளூர் தேவை அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.250 முதல் 300 வரை இருந்த மல்லிகை பூக்கள் விலை நேற்று கிலோ ரூ.1000 முதல் 1100 வரை உயர்ந்தது. தேவை குறைந்து விற்பனை இன்றி தேக்கமடைந்தால் மல்லிகை பூக்கள் சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கூறினர்.
23-Apr-2025