நாளை வேலை வாய்ப்பு முகாம்
தேனி: மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேனிகம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 125க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில் 8 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித் தகுதி உடையவர்கள், பி.இ., ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட இதர கல்விதகுதி உடையவர்களும் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணைய முகவரில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.