உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 24 ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்

24 ஆசிரியர்களுக்கு பணி மாறுதல்

தேனி: தேனி சி.இ.ஓ.,அலுவலகத்தில் மாறுதல் கலந்தாய்வு நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி நேர்முக உதவியாளர் சீனிவாசன், உயர்நிலைப் பள்ளிகளின் நேர்முக உதவியாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்டத்திற்குள் மனமொத்த கலந்தாய்வில் உடற்கல்வி ஆசிரியர்கள் 6 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 8 பேர், முதுகலை ஆசிரியர்கள் 4, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2 பேர் என, 20 பேரும் பணி மாறுதல் பெற்றனர். மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் ஒரு பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் மூவர் என4 பேர்மாறுதல் பெற்றனர். பணிமாறுதல் பெற்ற 24 பேருக்கு மாலையில் பணி ஆணைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !