கழுகுமலை ஓடை துார்வாரும் பணி: தினமலர் செய்தி எதிரொலி
போடி: மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சி, ரங்கநாதபுரம் 7வது வார்டு அருகே உள்ள கழுகுமலை ஓடை தூர்வாரப்பட்டன.போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் அம்பேத்கர் காலனி, முதல் தெரு, இரண்டு, மூன்றாம் தெரு, கழுகுமலை ஓடை தெரு உள்ளிட்ட தெருக்கள் அடங்கி உள்ளன. 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழுகுமலை ஓடை அமைந்து உள்ளது. ஓடை தூர்வாரப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பிளாஸ்டிக், குப்பை தேங்கி கிடந்தது. மழைநீர் சீராக செல்ல வழியின்றி கழிவுநீர் குளம் போல தேங்கி கிடந்தது. இதனால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசியதோடு, பல்வேறு வகையில் மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்து வெளியானது. செய்தியின் எதிரொலியால் மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மண் அள்ளும் இயந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டன.