உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடை மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு: போலீஸ் விசாரணை

கடை மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு: போலீஸ் விசாரணை

தேவதானப்பட்டி: கோழி இறைச்சி கடை மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் சாதிக்ராஜா 35. இவர் இதே ஊரின் மெயின் ரோட்டில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார்.ஜன.1,காலையில் கடையை திறக்க சென்ற போது கடையின் முன்பு மண்ணெண்ணெய் பாட்டிலில் தீ வைத்துஎரிந்து கருகிய நிலையில் பாட்டில் கிடந்தது.இதனை மர்ம நபர் வீசிவிட்டு சென்றது தெரிந்தது.இது பற்றி கடையின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து யார் பாட்டிலை வீசினார்கள் என்பது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.எச்சரிக்கை: கடையில் மண்ணெண்ணெய் பாட்டிலில் நெருப்பு வைத்து தூக்கி வீசியுள்ளனர். இதை பெட்ரோல் குண்டு வீசியதாக சிலர் வதந்தீயை கிளப்பி வருகின்றனர். வதந்தீ பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லுதெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை