மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் 442வது பிறந்தநாள் விழா நடந்தது. தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., மகாராஜன், ஒன்றிய செயலாளர் ராஜாராம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா முன்னிலையில் ஊர்வலமாக சென்று திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தே.மு.தி.க., சார்பில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் பாண்டியன், ம.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், பா.ஜ., சார்பில் நிர்வாகிகள் வழக்கறிஞர் குமார், கண்ணன், மனோஜ் குமார் உட்பட பல மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சண்முகசுந்தரபுரம், முத்துகிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், ரெங்கசமுத்திரம், நாச்சியார்புரம், எஸ்.ரங்கநாதபுரம், ஆண்டிபட்டி கிராமங்களை சேர்ந்த நாயுடு, நாயக்க சமுதாய பொதுமக்கள் பலர் வைகை ரோட்டில் இருந்து ஊர்வலம் சென்று திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்தனர். ஏற்பாடுகளை வட்டார நாயுடு, நாயக்கர் மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.