உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதிப்படி வணிக நிறுவன பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் தொழிலாளர் நலத்துறை ஆணையரகம் எச்சரிக்கை

விதிப்படி வணிக நிறுவன பெயர் பலகை வைக்காவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் தொழிலாளர் நலத்துறை ஆணையரகம் எச்சரிக்கை

தேனி : வணிக நிறுவனங்களில் விதிப்படி 5:3:2 என்ற விகிதாசாரத்தின் படி பெயர் பலகை வைக்காவிட்டால் நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம், வழக்குப்பதிவு செய்ய பரிந்துரைக்க வேண்டும்.' என தொழிலாளர் நலத்துறை ஆணையரகம் எச்சரித்துள்ளது.மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழ் மொழி எழுத்துருக்களை கொண்டு பயன்படுத்த வேண்டும். ஆங்கில பெயர் வேண்டும் என்றால், அப்பெயர்பலகையின் உள்ளேயே 2வதாக இடம்பெற வேண்டும். அனைத்து மொழி பெயர்களும் ஒரு பெயர் பலகையில் மட்டுமே பயன்படுத்தியிருக்க வேண்டும்.இதற்கான விதிமுறைகளில் தமிழில் எழுதப்படும் நிறுவன பெயரின் எழுத்துரு 5 சதவீதமாகவும், ஆங்கில மொழி எழுத்துரு 3 சதவீதமாகவும், இதர விருப்ப மொழி எழுத்துருக்கள் 2 சதவீதமாக வெளியிடப்பட வேண்டும். அதாவது 5:3:2 என்ற விகித கணக்கில் இருப்பது அவசியம். இதை கண்காணிக்க ஆய்விற்கு செல்லும் தமிழ் வளர்ச்சி துறை அலுவலர்களை நிறுவன உரிமையாளர்கள் வசை பாடுவது தொடர்கிறது. மேலும் தமிழ் வளர்ச்சித்துறையினர்அபராதம் விதிக்கவோ, விதிமீறும் வணிக உரிமையாளர்கள் மீது தண்டனை பெற்றுத்தரவோஅதிகாரம் இல்லை.இதனால் ஆய்வுக்கு செல்லும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வந்தனர். இதனால் தொழிலாளர் நலத்துறைஆணையம், தொழிலாளர் நலத்துறை மாவட்ட உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விதிமுறைகளின் படி பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் அபராதம், அதை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்.பின் நீதிமன்றம் இறுதி விசாரணை செய்து தண்டனை கிடைக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் முன் கூட்டியே வணிக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை