கூலித்தொழிலாளி குண்டாசில் கைது
தேனி : தேனி உப்புக்கோட்டை பாலசுப்பிரமணி 53. அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில் பாலசுப்பிரமணியை தேனி அனைத்து மகளிர் போலீசார் ஆக.15ல் கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி., பரிந்துரை செய்தார். பாலசுப்பிரமணியை கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.