உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் இன்றி சுகாதாரம் பாதிப்பு

அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் இன்றி சுகாதாரம் பாதிப்பு

உத்தமபாளையம்; உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் சுகாதாரம் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறப்பாக செயப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை படிப்படியாக தனது செயல்பாட்டினை குறைத்து கொண்டது. இங்கு டாக்டர்கள், நர்சுகள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் இல்லை. குறிப்பாக பிரசவம் பார்ப்பதற்கு உரிய டாக்டர் இல்லை. மயக்கவியல் டாக்டர் இல்லை. முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் 5 பேர்கள் ஒரு ஆண்டு பயிற்சிக்கென வந்து, அவர்களும் திரும்பி சென்று விட்டனர். தற்போது ஒரு எம்.டி. டாக்டர் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் இரண்டு பேர் உள்ளனர். ஒருவர் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருவர் மட்டுமே நிரந்தர பணியாளர். பிரேத பரிசோதனை நடந்தால், அவர் ஓய்வுக்கு சென்று விடுவார். எனவே மருத்துவமனை வளாகத்தில் சுத்தம் செய்யும் பணி முடங்கி விடுகிறது.இது பற்றி மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், 'மருத்துவமனைக்கு உரிய டாக்டர்கள், நர்சுகள் , துப்புரவு பணியாளர்களை அரசு அனுமதித்து விட்டு, அதன் பின் பணி செய்யவில்லை என்றால் கேள்வி கேட்கலாம். உரிய வசதிகளை செய்து தராமல், மருத்துவமனை மோசம் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்,' என்று கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி