உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷனில் தரமற்ற அரிசி பணியாளர்கள் புலம்பல்

ரேஷனில் தரமற்ற அரிசி பணியாளர்கள் புலம்பல்

தேனி : மாவட்டத்தில் தேனி நகர், சுற்று வட்டார பகுதிகளுக்கு தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதால், வினியோகத்தின் போது பொதுமக்கள் வாக்குவதாம் ஏற்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் புலம்புகின்றனர்.மாவட்டத்தில் 430க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடைகளுக்கு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 5 கோடவுன்களில் மூலம் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கடைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமற்று உள்ளதாகவும், அதில் வேறு சில பொருட்கள் கலந்து வருவதாகவும் புகார் எழுந்தன. இந்நிலையில் தேனி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி தரமற்று உள்ளதாகவும், இதனை வினியோகம் செய்யும் போது பொதுமக்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் ரேஷன் கடை பணியாளர்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ